Saturday, February 16, 2013

நினைவுகளின் நித்திரை


சபிக்கப்பட்ட நம் காதலுக்கு
நினைவுகளின் நித்திரை பூங்கா மரத்தடி ஒற்றை வாங்கில்

Friday, February 15, 2013

போராட்டம்!

ஊரடங்கும் நள்ளிரவில்
கலைந்த கனவுகளுக்கும்
தொடரும் நினைவுகளும்
இடையில் போராட்டம்,
வெல்வது யார்என்று
எப்படி அறிவிப்பேன் அவைகளுக்கு
முடிவு என் மயான எல்லையில் என்று!....

அவள் கவிதைகள்!


என் காகித இதயத்தில் கவிதை
எழுதியவள் என் காதலியாள்!
கவிஞர்கள் புரியாக்கவிதை எழுதி கவிஞர்களை மிஞ்சியவள் அவள்!
இலக்கணங்களை கூட அதிசயிக்க வைத்த அவளது கவிதைகள்!
இவை அவள் முத்தம் கொண்டு மட்டுமே
வாசிக்கப்படுகின்றன! ♥

காயப்பட்ட காதலி


வள்ளுவன் காதலி அனிச்சமலரை வீட
மென்மையானவள்;
என் காதலியோ அனிச்ச மலரால் காயப்பட்டவள்!..
♥ ♥ ♥

யாரறிவாரோ?!!! ♥




தொட்டில் தூக்க
நரிவிரட்டல்களுக்காக
உன் மழலை சிரிப்பு அடமானம் வைக்கப்பட்டதால்தானா,
இன்று உன் புன்னகைகள் கூட
எனக்கு மறுக்கப்படுகின்றன!

Wednesday, February 13, 2013

♥கூலிப்படை♥


என்னவள் கூலிப்படை,
உயர்ஜாதி வண்டின தேனீக்கள்!
அவை நள்ளிரவில் கொள்ளைபோன அவள்
வியர்வைத்துளி தேடிப்பறக்கின்றன,
அதிகாலை பூக்கள் தேடி!!!...

சிணுங்கோபத்தாள்........ ♥



அரும்பிடும் மொட்டினுள் மலர்
வாசம் போல்
என்னவள் முறைத்திடும் சிணுங்கோபத்துள் அவள்
பாசம்....
எனக்காய்.......

ஒரு ஜீவராகம்!!!......

நீயும் காதலித்தாய்
நானும் காதலித்தேன்
ஆனால்
நீயும் நானும் காதலித்து கொள்ளவே இல்லை!

காதலிக்கப்படாத நம் காதல்,
காதலுக்காய் ஒரு ஜீவராகமாய் என்றேன்றும்
ஒரு மூலையிலாவது இசைத்துக்கொண்டே இருக்கும் தனிமையில்......

♥♥♥♥

♥காதலின் புதிய பரிணமம்...

காவியங்களின் புதிய அஸ்திவாரம்...

இதயதுடிப்பின் இனிய பகிர்வுகள்

என் இக் கவிதுளிகள்!!♥♥♥

Thanks Graphic #119

Template by:

Free Blog Templates