சமகால கவிதைகள்


சரித்திரமாக்குங்கள்!!!.....

வீரத்தாய் மண் பெற்றிட்ட பிள்ளைகள் நாங்கள்...
இன்று அவள் தன்மானம் காக்க
மார்பில் சன்னம் ஏந்திஉடம்பில் செல் வாங்கி
வீரமரணம் தழுவப்போவதற்காக
பெருமை கண்ணீர் வடிக்கிறோம்!!!.....

அன்றைய வீரதமிழன் எங்கே?...
கோழையாகி எட்டப்பனாய்
கைகோர்க்கும் இன்றைய இளைஞன் எங்கே?....

பாரதி கண்ட புதுமை பெண் எங்கே?...
ஆடைக்குறைப்போடு பெண்மையை
பங்குபோடும் இன்றைய யுவதி எங்கே?....

யாராவது வாரீர்........
என் கண்ணீரின் அர்த்தம் புரிந்தால்
அதை என்னில் சரித்திரமாக்குங்கள்!!!.....
சிந்திய செந்நீர் கொண்டு.......



சாடும் மனிதனுள் தேடும் மனிதநேயம்




வாடிய பயிரை கண்ட போதெல்லாம்
வாடினேன் என்ற அந்த வள்ளல் எங்கே?
பொருளாதார போராட்டத்தில்

மனிதம் மறந்த மனிதன் இங்கே!
பரிசுத்த அன்பு மறக்கப்பட்டதா.....
இல்லை மறுக்கப்பட்டதா உன்னிடம்....
உப்பில்லா பண்டம் குப்பையிலே சான்றோர் வாக்கு
பணமில்லா மனிதன் தான் குப்பையிலே இன்றோர் போக்கு!

ஏன் இந்த பாகுபாடு
ஏன் இந்த சராசரிவித்தியாசம்
ஏன் இந்த பிரிவினை
பணம் படைத்தவன் மட்டுமே மனிதனா?
பணம் மட்டும் தான் மனிதனை படைக்கிறதா?

உதிரும் பூக்கள் பார்த்தேன் தந்தன வாசம்
சாடும் மனிதனை பார்த்தேன்
தேடினேன் மனித நேயத்தை!

♥♥♥♥

♥காதலின் புதிய பரிணமம்...

காவியங்களின் புதிய அஸ்திவாரம்...

இதயதுடிப்பின் இனிய பகிர்வுகள்

என் இக் கவிதுளிகள்!!♥♥♥

Thanks Graphic #119

Template by:

Free Blog Templates