Saturday, April 20, 2013

அஹீம்சையாள்!

கண்களில் இருந்தும் உதடுகளில் இல்லையென அஹீம்சை யுத்தம் செய்யும்
உன் முன் நான் மட்டுமல்ல என் கவிதைகளும் கூட முடக்கப்படுகின்றன!

இருந்தும் இல்லையென அஹீம்சை முறையில் கொல்லாதே, பாவம் என் கவிதைகள் கண்ணிர் சிந்த
தெரியாதவை.


குட்டி கவிதைகள் - 11)
என்னில் நீ கண்களால் எழுதிய கவிதைகளின் எச்சங்களே உன் சிந்தனையில் கவியாகி
காதிதத்தில் எழுத்தாகின்றன....
2)
நம் காதலின் கடிதக்காரியும் நீயே..... தபால்காரியும் நீயே....
கைகளால் கடிதம் எழுதி கண்களால் தாபால் அனுப்பும் காதல்காரியும் நீயே.........

3)
என் நாள்குறிப்பு அத்தனையும் உன்னை பற்றியதே ஏன் தெரியுமா என் ஒவ்வோரு நொடிபொழுதும் உன்னால் நகர்வதால்.........

4)
உன்னை ஓவியமாய் வரைய சங்கமிக்கும் என் தூரிகைகள்தோற்றுப்போகின்றன என் முன் நீ தளவாடியாய் தோன்றுவதால்.......Monday, March 11, 2013

சாலை யோரத்தில்

அவளிடம் இருந்து தனியாக்கப்பட்ட என் கவிதை 

தொகுதிகளுக்கு 

அவள் வீ சி சென்ற எந்தன் ஒற்றை ரோஜா மலரே


உதாரணம்,

என் கல்லறை சேர முடியா நிலையிலும் என் 


காதலை அவளுக்கு உணர்த்திய வண்ணம்
 

அவள் வீட்டு சாலை யோரத்தில்,அது

தெரியவில்லை ஆனால் புரிகிறது ♥

இன்றேல்லாம் ஏனோ தெரியவில்லை ஆனால் 
 புரிகிறது விழி பேசும் மழலை மொழிகளால் நாம் 
 கவிதைபடிப்பது அடிக்கடி அடக்கிவிடும் நான் அடங்கிபோகும் உன் அட்கிகளால் 
 தான்என்று!...... ♥

நீ அறியாயோ ♥ ♥ ♥


மூச்சுகாற்றால் ஸ்பரிசித்து 
என் கவிதைகளை கற்பமடயசெய்பவளே!
உன் தீண்டலில் தான்  என் கவிதைகளும்
பெண்மை அடைகின்றன,

கவிதைகளுக்குள் கவிதைகளுக்கு வெட்கம்
உணர்த்திய என்னவளே உன் மூச்சுகாற்று
என் சுவாசமாக வேண்டாம்
உன் கூந்தல் கோதும் தென்றல் தழுவல்
போதுமே உன் வாசம் என் சுவாசமாவதற்கு

அந்த தென்றல் கூட அறிந்திருக்கும்
ரசிகன் என்னை கவி பித்தனாக்கியவள்
நீ என்று இன்னும் நீ அறியாயோ!!! ♥ ♥ ♥Saturday, February 16, 2013

நினைவுகளின் நித்திரை


சபிக்கப்பட்ட நம் காதலுக்கு
நினைவுகளின் நித்திரை பூங்கா மரத்தடி ஒற்றை வாங்கில்

Friday, February 15, 2013

போராட்டம்!

ஊரடங்கும் நள்ளிரவில்
கலைந்த கனவுகளுக்கும்
தொடரும் நினைவுகளும்
இடையில் போராட்டம்,
வெல்வது யார்என்று
எப்படி அறிவிப்பேன் அவைகளுக்கு
முடிவு என் மயான எல்லையில் என்று!....

அவள் கவிதைகள்!


என் காகித இதயத்தில் கவிதை
எழுதியவள் என் காதலியாள்!
கவிஞர்கள் புரியாக்கவிதை எழுதி கவிஞர்களை மிஞ்சியவள் அவள்!
இலக்கணங்களை கூட அதிசயிக்க வைத்த அவளது கவிதைகள்!
இவை அவள் முத்தம் கொண்டு மட்டுமே
வாசிக்கப்படுகின்றன! ♥

காயப்பட்ட காதலி


வள்ளுவன் காதலி அனிச்சமலரை வீட
மென்மையானவள்;
என் காதலியோ அனிச்ச மலரால் காயப்பட்டவள்!..
♥ ♥ ♥

யாரறிவாரோ?!!! ♥
தொட்டில் தூக்க
நரிவிரட்டல்களுக்காக
உன் மழலை சிரிப்பு அடமானம் வைக்கப்பட்டதால்தானா,
இன்று உன் புன்னகைகள் கூட
எனக்கு மறுக்கப்படுகின்றன!

Wednesday, February 13, 2013

♥கூலிப்படை♥


என்னவள் கூலிப்படை,
உயர்ஜாதி வண்டின தேனீக்கள்!
அவை நள்ளிரவில் கொள்ளைபோன அவள்
வியர்வைத்துளி தேடிப்பறக்கின்றன,
அதிகாலை பூக்கள் தேடி!!!...

சிணுங்கோபத்தாள்........ ♥அரும்பிடும் மொட்டினுள் மலர்
வாசம் போல்
என்னவள் முறைத்திடும் சிணுங்கோபத்துள் அவள்
பாசம்....
எனக்காய்.......

ஒரு ஜீவராகம்!!!......

நீயும் காதலித்தாய்
நானும் காதலித்தேன்
ஆனால்
நீயும் நானும் காதலித்து கொள்ளவே இல்லை!

காதலிக்கப்படாத நம் காதல்,
காதலுக்காய் ஒரு ஜீவராகமாய் என்றேன்றும்
ஒரு மூலையிலாவது இசைத்துக்கொண்டே இருக்கும் தனிமையில்......

♥♥♥♥

♥காதலின் புதிய பரிணமம்...

காவியங்களின் புதிய அஸ்திவாரம்...

இதயதுடிப்பின் இனிய பகிர்வுகள்

என் இக் கவிதுளிகள்!!♥♥♥

There was an error in this gadget

Template by:

Free Blog Templates